தமிழர் தலைநகரில் இரவோடிரவாக பலர் கைது

Report Print Abdulsalam Yaseem in சமூகம்
185Shares

தமிழர் தலைநகரான திருகோணமலையில் நேற்றிரவு, கேரளா கஞ்சாவை தம்வசம் வைத்திருந்த மற்றும் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆத்திமோட்டை பகுதியில் இரண்டு கட்டு கஞ்சாவை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் அதே இடத்தை சேர்ந்த 23 வயதுடைய இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெள்ளை மணல் பகுதியில் இரண்டு பேரும் கைதாகியுள்ளனர்.

அத்துடன் கஞ்சா போதைப்பொருள் பயன்படுத்திக் கொண்டிருந்த நான்கு இளைஞர்களை மொரவெவ பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரியவருகிறது.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை இன்றைய தினம் திருகோணமலை நீதிமன்றில்ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.