இரகசிய வீடொன்று இலங்கையில் முற்றுகை

Report Print Ajith Ajith in சமூகம்

துபாயில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள போதைவஸ்து கடத்தல்காரர் மாகந்துரே மதுஸின் இரகசிய வீடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மொரட்டுவ - ராவத்தாவத்தை என்ற இடத்தில் உள்ள குறித்த இரகசிய வீடு நேற்று கண்டுபிடிக்கப்பட்டு அங்கிருந்து பல பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

அந்தவகையில் புதிய தன்னியக்க துப்பாக்கி உட்பட பல ஆயுதங்கள், 1800 மில்லியன் ரூபா பெறுமதி கொண்ட 167 கிலோகிராம் ஹெரோய்ன் என்பன விசேட அதிரடிப்படையினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கைப்பற்றப்பட்ட ஹெரோய்ன் போதைப்பொருள் விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் கைது செய்யப்பட்ட மதுஸின் நண்பர் ஒருவரிடம் இருந்து கிடைத்த தகவலுக்கு அமையவே இந்த வீடு முற்றுகையிடப்பட்டது.

Latest Offers