மட்டக்களப்பு - வெல்லாவெளி, றாணமடு மலையார்கட்டு வயல் பிரதேசத்திலிருந்து கைகள் கட்டப்பட்ட நிலையில் அடிகாயங்களுடன் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளதுடன், 62 வயதுடைய விவசாயியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என தெரியவருகிறது.
தனிப்பட்ட முரண்பாடு காரணமாக இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அத்துடன் உரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.