கொழும்பு ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய கொடியேற்றம்

Report Print Akkash in சமூகம்

கொழும்பு, கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் தேவஸ்தானத்தில் இன்று காலை கொடியேற்றம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது ஸ்ரீ சிவகாம சௌந்தரியம்பிகா சமேத ஸ்ரீசொர்ண சபேஸ்வரப் பெருமானுக்கு விசேட பூஜைகள் நடத்தப்பட்டுள்ளன.

தொடர்ந்து நவசந்தி ஆவாஹனம் உற்சவம் நடைபெற்றுள்ள நிலையில் இதில் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில் இன்று மாலை சாயராக்ஷப் பூஜை, இரண்டாங் காலப் பூஜை, ஸ்தம்ப பூஜை, வசந்த மண்டப் பூஜை ஆகியன இடம்பெறவுள்ளன.

Latest Offers