கொழும்பில் அரசியல்வாதியின் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்

Report Print Sujitha Sri in சமூகம்

கொழும்பு, மட்டக்குளி - கிம்புலாஎல பகுதியிலுள்ள, மேல் மாகாணசபை உறுப்பினர் முகம்மட் பாயிசின் வீட்டின் மீது இன்று அதிகாலை பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஜன்னல் வழியாக பெற்றோல் குண்டு வீட்டிற்குள் வீசப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதனால் வீட்டின் பின் புறப்பகுதி சேதமடைந்துள்ளதுடன், மின் உபகரணங்கள் உள்ளிட்ட சில பொருட்கள் எரிந்து சாம்பலாகியுள்ளன.

சம்பவத்தை அறிந்து இன்று காலை அங்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் பாயிஸிடமிருந்து முறைப்பாட்டையும் பதிவு செய்துள்ளனர்.

Latest Offers