கண்டி டி.எஸ்.சேனநாயக்க பாடசாலை வளாகத்திற்கு சொந்தமான பகுதி வலயக்கல்வி பணிமனையால் எடுத்துக் கொள்ளப்படுவதாக தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறித்த ஆர்ப்பாட்டம் இன்று கண்டி டி.எஸ்.சேனநாயக்க பாடசாலையின் வளாகத்திற்கு முன்பாக இடம்பெற்று வருகின்றது.
இதில் பாடசாலையின் பழைய மாணவர்களும், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
இதேவேளை குறித்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.