வவுனியா, இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் சிறுவர் விழிப்புணர்வு நிகழ்வு

Report Print Theesan in சமூகம்

வவுனியா, இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் சிறுவர் துஷ்பிரயோக விழிப்புணர்வு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

வன்னி பிராராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் இன்று காலை விழிப்புணர்வு நிகழ்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது சிறுவர்கள் எதிர்நோக்கும் போதைப்பொருள் பாவனை, துஷ்பிரயோகம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக பொலிஸாரால் மாணவர்களுக்கு ஒளிப்படக்காட்சி காண்பிக்கப்பட்டு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் விளையாட்டுத்துறையில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு வன்னி பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரினால் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இதில் வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர அபேயவிக்கிரம, வடமாகாண கிறிஸ்தவ ஒன்றியத்தின் தலைவரும், கிறிஸ்தவ மத விவகாரங்களுக்கான செயலாளருர் எஸ். சந்திரகுமார், போக்குவரத்துப் பொலிஸ் பொறுப்பதிகாரி, தலைமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, சிறுவர் பெண்கள் பொறுப்பதிகாரி மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

Latest Offers