மரண தண்டனையை நிறைவேற்றும் அலுகோசு பதவிக்கான நேர்முகப் பரீட்சைகளின் பின் இருவர் குறித்த பதவிக்கு தெரிவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றம் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியில், குறித்த நேர்முக பரீட்சைகள் எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.
கிடைக்க பெற்ற 102 விண்ணப்பங்களிலிருந்து 79 விண்ணப்பதாரிகளை நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படவுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த விண்ணப்பங்களில் அமெரிக்க பிரஜை ஒருவரின் விண்ணப்பமும் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.