கிளிநொச்சியில் இரணைமடு குள பயிர்ச்செய்கை தொடர்பான கூட்டம்

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சியில் இரணைமடு குளத்தின் கீழான சிறுபோக பயிர்ச்செய்கை தொடர்பான கூட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றுள்ளது.

இதன்போது 14,000 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான விதைப்பு திகதி, நீர் விநியோக திகதி, கால்நடை கடடுப்பாட்டு திகதி என்பன அறிவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் கூட்ட தீர்மானங்களுக்கு அமைவாக சகல நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Latest Offers