வெளிமாவட்ட மீனவர்களுடன் கடற்படையினர் கலந்துரையாடல்

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவு, நாயாற்று பகுதியில் வெளிமாவட்ட மீனவர்களுக்கும் கடற்படையினருக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

புத்தளம், சிலாபம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடி அமைச்சின் அனுமதியுடன் நாயாற்று பகுதிக்கு சென்று நேற்று பிற்பகல் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது தடைசெய்யப்பட்ட லைலா வலை, சுருக்குவலைகள் உள்ளிட்ட சட்டவிரோத கடற்தொழில் உபகரணங்கள் என்பவற்றை கொண்டுவந்து ஆழ்கடல் மீன்பிடித்தொழில் மேற்கொள்ளக்கூடாது என்று மீனவர்களுக்கு கடற்படையினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபடுவோர் தொடர்பில் தகவல் அறிந்தால் அறியத்தரும்படி கடற்படையினரால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை இன்று அனுமதிக்கப்பட்ட கடற்தொழில் நடவடிக்கையில்அனுமதி பெற்று வந்த குறித்த 50 வெளிமாவட்ட மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Latest Offers