மாவட்டத்தில் முதலாமிடம் பெற்றுள்ள கந்தளாய் அல்தாரீக் மகா வித்தியாலயம்

Report Print Mubarak in சமூகம்
48Shares

திருகோணமலை - கந்தளாய், அல்தாரீக் மகா வித்தியாலயத்திற்கு பெருமை தேடித் தந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

கந்தளாய், அல்தாரீக் மகா வித்தியாலயத்தின் பிரதி அதிபர் தலைமையில் இன்று குறித்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.

பாடசாலையின் பொலிஸ் மாணவர் படையணியானது மாவட்டத்தில் முதலாம் இடத்தினையும், கிழக்கு மாகாணத்தில் ஐந்தாம் இடத்தினையும் பெற்றுள்ள நிலையில் மாணவர் படையணியின் மாணவர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது பாடசாலையின் அதிபர் கருத்து தெரிவிக்கையில்,

களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியும், கல்வித் திணைக்களமும் இணைந்து மாணவர்களின் உடற்பயிற்சி திறனை வளர்க்கும் நோக்கில் நடத்திய மூன்று மாதகால பொலிஸ் படையணியின் போது எமது கந்தளாய் அல் தாரீக் பாடசாலை மாணவர்கள் 25 பேர் கலந்து கொண்டு பயிற்சியை நிறைவு செய்தார்கள்.

இப்போட்டி நிகழ்சிகளில் 26 பாடசாலைகள் பங்குபற்றியிருந்தன. இதில் எமது அல்தாரீக் மகா வித்தியாலயமும் கலந்து கொண்டு மாவட்டத்தில் முதலாமிடத்தையும், மாகாணத்தில் ஐந்தாம் இடத்தினையும் பெற்றுள்ளது.

எமது பாடசாலை மாணவர்களின் அபார திறமையினாலே இவ்வெற்றி கிடைக்கப்பெற்றுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.