இலங்கையிலுள்ள ஹோட்டல் அறையில் உயிரிழந்த நிலையில் வெளிநாட்டு பிரஜை

Report Print Steephen Steephen in சமூகம்

இலங்கையில், கொக்கல பிரதேசத்திலுள்ள ஹோட்டல் ஒன்றின் அறையில் தங்கியிருந்த ஜேர்மன் பிரஜை உயிரிழந்த நிலையில் நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

63 வயதான ஜேர்மனியரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்துள்ளார்.

இந்த ஜேர்மனியர் கடந்த 8ஆம் திகதி கொக்கல பிரதேசத்திற்கு வந்து இந்த ஹோட்டலில் தங்கியிருந்துள்ளார்.

இவ்வாறான நிலையில் வெளிநாட்டு பிரஜை இறந்துள்ளமை குறித்து ஹோட்டல் முகாமையாளர்கள் ஹபராதுவ பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மேலும் உயிரிழந்த வெளிநாட்டு பிரஜையின் சடலம் தற்போது காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டு உள்ளதுடன் பிரேதப் பரிசோதனை இன்று நடைபெறவுள்ளது.

Latest Offers