மலையகத்தில் ஏற்பட போகும் நிலைமை

Report Print Steephen Steephen in சமூகம்

மலையகத்தில் தோட்டங்கள் அமைந்துள்ள மலைப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக நிலவும் அதிகமான வெப்பதுடன் கூடிய காலநிலை காரணமாக நீர் நிலைகள், நீர் ஊற்றுகள், நீர் தேக்கங்கள், ஆறுகள், குளங்கள் மற்றும் அருவிகளில் தண்ணீர் குறைந்து வருவதாக மலையக சுற்றாடல் சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

மலையகத்தில் உள்ள அனைத்து நீர் தேக்கங்களிலும் தற்போது தண்ணீர் மட்டம் குறைந்துள்ளது. அத்துடன் ஆறுகள், குளங்கள் மற்றும் மலை அருவிகளில் தண்ணீர் துரிதமாக குறைந்து வருகிறது.

மலையக தோட்டங்களில் காணப்படும் நீர் ஊற்றுகள் வறண்டு போகும் நிலையை எதிர்நோக்கியுள்ளன எனவும் சுற்றாடல் அமைப்பின் பிரதிநிதிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.