விபத்தில் பெண் பலி: பிரபல பாடகர் கைது

Report Print Steephen Steephen in சமூகம்

கொழும்பு - கண்டி வீதியின் கிரில்லவல பிரதேசத்தில் வீதி கடவையில் சென்ற பெண் மீது வாகன மோதியதில் அந்த பெண் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பிரபல சிங்கள பாடகர் ஜனநாத் ரங்கன வராகொட கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்துச் சம்பவம் இன்று அதிகாலை 5.30க்கு நடந்துள்ளது. கொழும்பு நோக்கி சென்ற பாடகரின் காரில் மோதுண்ட 62 வயதான பெண் படுகாயமடைந்த நிலையில், ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பாடகர் மகர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஜனநாத் வராகொட இலங்கையின் பிரபலமான கலை குடும்பமான விஜேரத்ன வராகொடகுடும்பத்தின் பிள்ளை என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers