ஆட்சிக்காலத்தில் கொள்ளையிட்ட பொருளை இலங்கைக்கு வழங்கும் ஒல்லாந்து

Report Print Steephen Steephen in சமூகம்
257Shares

ஒல்லாந்தர் (தற்போதைய நெதர்லாந்து) இலங்கையை ஆட்சி செய்த காலத்தில் அவர்கள் இலங்கையில் கொள்ளையிட்ட பொருட்களை மீண்டும் இலங்கையிடம் வழங்குவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நெதர்லாந்து ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பல நாடுகளுக்கு சொந்தமானவை எனக் கூறப்படும் ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் நெதர்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்ட பொருட்களை அந்நாடுகளிடம் மீள கையளிக்க நெதர்லாந்து அரசு எடுத்துள்ள தீர்மானத்திற்கு அமைய இந்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இலங்கையுடன் மட்டுமல்லாது இந்தோனேசியா உட்பட சில நாடுகளுடனும் இதேபோன்ற பேச்சுவார்த்தைகளை நெதர்லாந்து ஆரம்பித்துள்ளது.

நெதர்லாந்தில் உள்ள அந்நாட்டுக்கு சொந்தமில்லாத பிறநாடுகளுக்கு உரிமையான பொருட்கள் அந்நாடுகளிடம் கையளிக்கப்பட உள்ளது.

ஹெம்ஸ்டர்மில் உள்ள அருங்காட்சியகம் இந்த பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது.

இதன் ஊடாக கண்டி ராஜ்ஜியத்தை ஆட்சி செய்த மன்னர் ஒருவரிடம் இருந்து பீரங்கி மாதிரி ஒன்றை இலங்கையிடம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

1765 ஆம் ஆண்டு ஒல்லாந்தருக்கும் கண்டி அரச படைகளுக்கும் இடையில் நடந்த சண்டையின் போது இந்த பீரங்கி மாதிரியை ஒல்லாந்தர் கைப்பற்றியுள்ளனர்.

இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்த நெதர்லாந்து அதிகாரிகள் இலங்கை வரவுள்ளனர்.

1980 ஆம் ஆண்டு இலங்கைக்கு சொந்தமான வெங்கலத்தில் செய்யப்பட்ட இந்த பீரங்கி மாதிரியை திரும்ப பெற இலங்கை, நெதர்லாந்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

எனினும் இதன் உண்மையான உரிமையை அறிய நெதர்லாந்து நீண்டகாலம் விசாரணைகளை நடத்தியுள்ளது.

நெதர்லாந்தில் இருக்கும் வேறு நாடுகளுக்கு சொந்தமான பொருட்களை பெற்றுக்கொள்ள அந்நாடுகள் கோரிக்கை விடுக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இதன் கீழ் எத்தியோப்பியா தனக்கு சொந்தமான சில பொருட்களை பெற்றுக்கொண்டுள்ளது. ஒல்லாந்தர் இலங்கையில் 1640 ஆம் ஆண்டு முதல் 1796 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தனர்.