கொழும்பு - மோதரை அல் கம்சா பாடசாலையில் மூன்று மாடி கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு இன்றைய தினம் மேல்மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் தலைமையில் அவரின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இடம்பெற்றுள்ளது.
இந் நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்துக் கொண்டுள்ளனர்.