அனுமதிப்பத்திரமின்றி பன்றி இறைச்சியை கொண்டு சென்ற நபருக்கு விளக்கமறியல்

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி மூன்று கிலோ பன்றி இறைச்சியை கொண்டு சென்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இம்மாதம் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் முன்னிலையில் இன்று ஆஜர்ப்படுத்திய போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாவடிச்சேனை,வெருகல் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் அனுமதிப்பத்திரமின்றி மூன்று கிலோ பன்றி இறைச்சியை சேருநுவர காட்டுப் பகுதியிலிருந்து மாவடிச்சேனைக்கு கொண்டு சென்ற போது, பாதுகாப்பு கடமையில் நின்ற பொலிஸாரினால் நிறுத்தி சோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் பன்றி இறைச்சியுடன் சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Latest Offers