கிண்ணியா சுற்றுலா நீதிமன்றத்தை உடன் ஆரம்பிக்க கோரிக்கை!

Report Print Abdulsalam Yaseem in சமூகம்
88Shares

கிண்ணியா மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளை கருத்திற் கொண்டு உடனடியாக கிண்ணியா பிரதேசத்தில் சுற்றுலா நீமன்றத்தை ஆரம்பிக்குமாறு கோரும் தீர்மானம் திருகோணமலை சட்டத்தரணிகள் சங்கத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த தீர்மானம் இன்றைய தினம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கிண்ணியாவில் யுத்த காலத்திற்கு முன்னர் சுற்றுலா நீதிமன்றம் இயங்கி வந்தது. யுத்தத்திற்கு பின்னர் சில நீதிமன்றங்கள் மீள ஆரம்பிக்கப்பட்டாலும் கிண்ணியா நீதிமன்றம் ஆரம்பிக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக மக்கள் தமது அலுவல்களை நிறைவேற்றிக் கொள்வதில் பலத்த சிரமத்தை எதிர் நோக்குகின்றனர். இந்த நிலைமையினை கருத்திற் கொண்டு கிண்ணியா சுற்றுலா நீதிமன்றை ஆரம்பிக்க மேற்கொள்ளப்படும்.

அனைத்து முயற்சிகளுக்கும் தமது பூரண ஆதரவினை வழங்கி இதனை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரும் தீர்மானம் திருகோணமலை நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவி சட்டத்தரணி சுபாஷினி சித்தரவேல் தலைமையில் கூடி ஏகமனதாக எடுக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை திருகோணமலை நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்க செயலாளார் சட்டத்தரணி சாஹீர் தெரிவித்துள்ளார்.