கல்முனை தமிழ் பிரதேச செயலக இந்துக் கோவில் தீர்ப்பு ஏப்ரல் மாதம்!

Report Print V.T.Sahadevarajah in சமூகம்

கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகத்தில் உள்ள இந்துக் கோவிலை அகற்ற கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கிற்கு அடுத்த மாதம் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது என எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை கல்முனை நீதிவான் ஐ. என். ரிஸ்பான் முன்னிலையில் இன்று எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகத்தில் உள்ள இந்துக் கோவிலை அகற்ற உத்தரவிடக் கோரி கல்முனை மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். றகீப்பால் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நீதிவான் ஐ. என். ரிஸ்பான் நீதிமன்றத்தின் கட்டளை எதிர்வரும் ஏப்ரல் 30ஆம் திகதி வழங்கப்படும் என்று அறிவித்தார்

Latest Offers