வெளிநாடு சென்ற இலங்கையர்களுக்கான வரப்பிரசாதம்! தடுத்து நிறுத்திய மைத்திரி

Report Print Kamel Kamel in சமூகம்

சர்வதேச தொலைபேசி அழைப்புக்களுக்கான வரியை நீக்க வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.

2019ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான வரியை நீக்குவது தொடர்பில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர யோசனை முன்வைத்திருந்தார்.

இவ்வாறு வரியை தளர்த்துவதன் மூலம் வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு பெற்றுச் சென்றுள்ளவர்கள், இலங்கையில் உள்ள தங்களது உறவுகளுடன் குறைந்த செலவில் பேச முடியும் என நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எனினும் வரிச் சலுகையை வழங்குவதன் மூலம் பாரியளவிலான அந்நிய செலாவணியை இழக்க நேரிடும் எனவும் இதனால் குறித்த தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறும் ஜனாதிபதி அமைச்சரவைக் கூட்டத்தில் நேற்று தெரிவித்துள்ளார்.

வரிச் சலுகை ஊடாக சுமார் ஆறு பில்லியன் ரூபா வருமானத்தை இழக்க நேரிடும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.