வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் வைத்து இருவர் கைது

Report Print Theesan in சமூகம்

வவுனியாவில் ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில்இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் சந்தேகப்படும் வகையில் நடமாடிய இருவர் நேற்று வவுனியா பொலிஸ் நிலைய போதை தடுப்பு பிரிவினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போதே அவர்களிடம் இருந்து இரண்டு கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மாளிகாவத்தை, நுகேகொடை பகுதிகளை சேர்ந்த 40 வயதுடையவர்கள் என தெரியவருகிறது.

சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில்ஆஜர்படுத்தபடவுள்ளனர்.

Latest Offers