பல கோடி பெறுமதியான இரத்தின கற்களை கொள்ளையடித்த பெண்

Report Print Vethu Vethu in சமூகம்
215Shares

நீர்கொழும்பில் பெறுமதியான இரத்தின கற்களுடன் வெளிநாட்டு பெண் ஒருவர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

களுத்துறை வடக்கு ஹோட்டலில் வைத்து கொள்வனவு செய்வதாக கூறி ஏமாற்றிய மொன்கோலி நாட்டு பெண் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பில் சொகுசு மோட்டார் வாகனத்துடன் குறித்த 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 5 கோடி ரூபாய் பெறுமதியான மூன்று இரத்தின கற்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் பாதாள உலக குழு உறுப்பினர்கள் மற்றும் இராணுவத்தினரும் உள்ளனர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.