அக்கராயன் குளத்தின் கீழ் 2790 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான அக்கராயன் குளத்தின் கீழ் இவ்வாண்டு 2790 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாரிய நீர்ப்பாசன குளங்களின் ஒன்றான அக்கராயன் குளத்தில் தற்போதுள்ள நீரின் அளவை கொண்டு 2790 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதற்கான முன்னாயத்த கூட்டம் நடைபெற்று பயிர் செய்கைக்கான திகதிகள் அறிவிக்கப்படடுள்ளன.

கடந்த இரண்டு வருடங்கள் நிலவிய தொடர் வறட்சி காரணமாக 2017 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் காலபோக செய்கை பாதிக்கப்பட்டதுடன், 2018ஆம் ஆண்டிலே சிறுபோக செய்கையும் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த பெருமழை காரணமாக குளத்தின் நீர் மட்டம் அதிகரித்த நிலையில் காலபோக செய்கை வெற்றிகரமாக அறுவடை செய்யப்பட்டு தற்போது சிறுபோக செய்கைக்கான முன்னாயத்தங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை குளத்தினுடைய அபிவிருத்தி பணிகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.