முல்லைத்தீவு - கரைச்சி குடியிருப்பிலுள்ள வீடொன்று உடைக்கப்பட்டு கமரா, மடிக்கணினி உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் நேற்று களவாடப்பட்டுள்ளன.
இது தொடர்பில் வீட்டின் உரிமையாளரால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பட்டப்பகலில் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த குறித்த பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஊடகவியலாளரொருவரின் வீட்டிலிருந்தே இந்த பொருட்கள் களவாடப்பட்டள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.