இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து விபத்து

Report Print Gokulan Gokulan in சமூகம்

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று தெல்தெனிய பிரதேசத்தில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த பேருந்து நேற்று மாலை கண்டியிலிருந்து மொனராகலை நோக்கி பயணித்து கொண்டிருந்த வேளையிலேயே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்தில் 60 பேர் பயணித்துள்ள நிலையில், 11 பேர் காயமடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ஒருவர் கவலைக்கிடமாகவுள்ள நிலையில் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.