வரவு செலவுத்திட்டத்தின் மூலம் நாட்டு மக்களின் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
2014ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில; எரிபொருள், எரிவாயு உட்பட அத்தியாவசியப்பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
அனைத்து அரசாங்க ஊழியர்களினதும் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. சில பிரிவினரது அடிப்படை சம்பளம் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
கல்வித்துறையைப் பொருத்த வரை 3000 விஞ்ஞான ஆய்வு கூடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் பாடசாலைகளுக்கு 90 வீதம் மின்சாரம் மற்றும் பொது வசதிகள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.
4000 ஆசிரிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் மேலும் ஆசிரிய நியமனங்கள் எதிர்வரும் மாதங்களில் வழங்கப்படவுள்ளன.
முதற்தடவையாக 48 மருந்துப் பொருட்களின் விலைகள் ஒரே தடவையில் குறைக்கப்பட்டுள்ளதுடன் சுகாதார சேவையில் மக்களுக்குப் பெரும் சலுகைகள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.
நாட்டு மக்களுக்குப் பல வழிகளிலும் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. சுயாதீன ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் சிறப்பு நன்மைகளை நாடு பெற்று வருகிறது.
கைத்தொழில் பேட்டைகள் அமைக்கப்பட்டு பெருமளவிலான தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவற்றை மக்கள் சரியாக கணக்குப் பார்ப்பர்கள் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.