மூன்று அம்ச கோரிக்கைகளை முன்வைத்து கறுப்புப் பட்டி போராட்டம்

Report Print Sumi in சமூகம்
84Shares

மூன்று அம்ச கோரிக்கைகளை முன்வைத்து வட மாகாண அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்று கறுப்புப் பட்டி போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் என்பவற்றின் இணைவில் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வடக்கில் உள்ள ஒவ்வொரு பாடசாலையின் நுழைவாயிலில் வைத்தும் இன்று காலை 8 மணி முதல் சுமார் 30 நிமிடங்கள் கறுப்புப் பட்டி அணிந்து, மௌன போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்துள்ளனர்.

போராட்டத்தின் போது, ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பளத்தை உயர்த்துதல், ஆசிரியர்கள் மீது செலுத்தப்படும் தேவையற்ற நெருக்கீடுகளை அகற்றுதல், மொத்த தேசிய உற்பத்தியில் கல்விக்காக 6 வீதம் ஒதுக்குதல் போன்ற 3 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தே இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நேற்றைய தினம் பாடசாலை நிறைவடையும் வரை வகுப்பறைகளில் ஆசிரியர்கள் கறுப்புப் பட்டி அணிந்து தமது கடமைகளை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.