வெட்டு காயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் மீட்பு

Report Print Gokulan Gokulan in சமூகம்
130Shares

இங்கிரியவில் கழுத்து பகுதி மற்றும் தொண்டை பகுதிகளில் வெட்டு காயங்களுடன் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சடலம் நேற்று மாலை இங்கிரிய - கொடிகல, குரண பிரதேசத்தில் இருந்தே மீட்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹபபான்கொட பிரதேசத்தினை சேர்ந்த 60 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இதேவேளை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.