தாயும், பிள்ளைகளும் உறங்கிக் கொண்டிருந்த வீட்டில் நள்ளிரவில் நடந்த விபரீதம்

Report Print Mohan Mohan in சமூகம்
1144Shares

முல்லைத்தீவு - வட்டுவாகல் பகுதியிலுள்ள தற்காலிக வீடொன்றில் நேற்று நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த வீட்டில் தாயும், இரண்டு பிள்ளைகளும் உறங்கிக்கொண்டிருந்த சமயம் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

எனினும் தாய் சுதாகரித்துக் கொண்ட நிலையில் பிள்ளைகளுடன் விபத்தில் இருந்து தப்பியுள்ளார்.

இந்த தீ விபத்திற்கு அப்பகுதியில் வசிக்கும் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் காரணமாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.