மாத்தறை - பம்பரன, அபேகுணவர்தன மாவத்தையின் புகையிரத குறுக்கு வீதியில் வைத்து இன்று காலை விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது புகையிரதத்துடன் காரொன்று மோதியுள்ளதாக தெரியவருகிறது.
சமிக்ஞை ஒலித்த போதும் புகையிரத பாதையினூடாக காரை செலுத்த முற்பட்ட வேளையிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தின் போது காரில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் இருவர் காயமடைந்துள்ளளனர்.
சம்பவத்தில் 53 வயதுடைய நபரே உயிரழந்துள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.