நாடளாவிய ரீதியில் அதிபர், ஆசிரியர்களினால் சுகயீன விடுமுறை போராட்டம் முன்னெடுப்பு

Report Print Ashik in சமூகம்

மன்னார் மாவட்டத்தில் உள்ள பல பாடசாலைகளில் இன்று சுகயீன விடுமுறை போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகளுக்கு முன்பாக இன்று காலை ஒன்றுகூடிய அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களினால் இப் போராட்டம் இடம்பெற்றுள்ளது.

ஆசிரியர்கள் கருப்புப் பட்டி அணிந்து தமது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளதோடு பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து தமது போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இப்போராட்டம் நடைபெற்றுள்ளது.

ஆசிரியர்களுக்கான சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும், 2019ஆம் ஆண்டு அரசினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பாதீட்டில் கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீட்டின் அளவை அதிகரித்தல் வேண்டும், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அழுத்தங்கள் உடனடியாக நிறுத்த வேண்டும், ஆசிரியர்களின் மான்பினை உயர்த்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன் வைத்து இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

போராட்டத்திற்கு பிறகு பாடசாலையின் செயற்பாடுகள் வழமை போல் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ஹட்டன்

ஹட்டனிலுள்ள பொஸ்கோ கல்லூரி, ஹைலண்ஸ் கல்லூரி, ஸ்ரீபாத சிங்கள மகாவித்தியாலயத்தின் ஆரம்ப பிரிவு மற்றும் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளிலும் சுகயீன விடுமுறை போராட்டம் இடம்பெற்றுள்ளது.

மூன்று அம்ச கோரிக்கைகளை முன்வைத்தே அதிபர், ஆசிரியர்களினால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மலையகத்திலும் சில பாடசாலைகளில் ஆசிரியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளதோடு, சில ஆசிரியர்கள் சேவைக்கு சமூகமளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹட்டன் செய்தி - திருமாள்