யாழில் உடலில் தீ வைத்து கொண்டு தற்கொலைக்கு முயற்சித்த நபர்!

Report Print Gokulan Gokulan in சமூகம்
198Shares

யாழில் நபரொருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டு தற்கொலை செய்ய முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று காலை 8 மணியளவில் யாழ். பருத்தித்துறை, மந்திகை அம்மன் கோயில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நபர் தொடர்பாக இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கப்பெறவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பாதிக்கப்பட்ட நபர் உடனடியாக அயலவர்கள் மூலம் நோயாளர் காவு வண்டியில் யாழ். வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.