கொலை, போதைப் பொருள் விற்பனையுடன் சம்பந்தப்பட்ட பாதாள உலகக்குழு உறுப்பினரான “ஜீ பூம்பா” என அழைக்கப்படும் மொஹமட் சியாம் என்பவர், கம்பளையில் வீடொன்றில் மறைந்திருந்த போது இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில் இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர், துபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள போதைப் பொருள் கடத்தல்காரான பாதாள உலகக்குழு தலைவர் கஞ்சிபான இம்ரானின் சகா எனவும் தெரியவந்துள்ளது.
இந்த சந்தேக நபர் அண்மையில் கொழும்பில் குடு சூட்டி என்ற பெண்ணின் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் மட்டுமல்லாது பல கொலை சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனவும் அவரை கைது செய்ய விசாரணைகளை ஆரம்பித்திருந்தாகவும் விசேட அதிரடிப்படையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.