இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ள அஞ்சல் சேவையாளர்கள்

Report Print Gokulan Gokulan in சமூகம்
54Shares

அஞ்சல் சேவையாளர்கள் இன்று நள்ளிரவு முதல் ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக தெரியவருகிறது.

அஞ்சல் மற்றும் தொலைத் தொடர்பு அதிகாரிகள் சங்கத்தின் பிரதான செயலாளர் எச்.கே.காரியவசம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில், சம்பள அதிகரிப்பு மற்றும் ஆட்சேர்ப்பு முறைமையில் உள்ள பிரச்சினை என்பவற்றை அடிப்படையாக கொண்டே இந்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.