டிக்கோயா, பிலிங்போனி பகுதியில் பொதுமக்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு

Report Print Thirumal Thirumal in சமூகம்
21Shares

நுவரெலியா மாவட்டம் - டிக்கோயா, பிலிங்போனி பகுதியில் அமைந்துள்ள தனியார் தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கெலனிவெளி பெருந்தோட்ட நிறுவனத்தின் கிழ் இயங்கும் டிக்கோயா சாஞ்சிமலை மேல்பிரிவு தோட்டத்தில் 09ம் இலக்க தேயிலை மலையில் ஊற்றெடுக்கும் நீரினை மறித்து டிக்கோயா பிலிங்போனி பகுதியில் இயங்கி வரும் தனியார் தேயிலை தொழிற்சாலைக்கு நீரினை கொண்டு செல்லும் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த திட்டத்தினை உடனடியாக நிறுத்துமாறு கோரியே பொதுமக்களால் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

சுமார் 1000இற்கும் மேற்பட்டோர் பதாதைகளை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களின் வேலைத்திட்டத்தின் ஊடாக இந்த குடிநீர், குறித்த தேயிலை தொழிற்சாலைக்கு கொண்டு சென்றமையால் லெச்சுமிதோட்டம், பொயிஸ்டன், சாஞ்சிமலை பகுதிகளில் உள்ள பாடசாலை மாணவர்களும் பொதுமக்களும் நீர் இன்மையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக இம் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

எங்கள் தோட்டபகுதியில் ஊற்றெடுக்கின்ற நீரினை மறித்து இது போன்ற தனியார் நிறுவனங்களுக்கு கொண்டு செல்ல வேண்டாமென பொதுமக்கள் பலமுறை தோட்ட நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தையினை மேற்கொண்ட போதிலும் அதற்கான இணக்கப்பாடு எதுவும் எட்டப்படவில்லையெனவும் எங்கள் தோட்டத்தில் உள்ள நீரினை வேறு ஒரு தனியார் நிறுவனத்த கொண்டு செல்ல ஒரு போதும் எங்களால் அனுமதிக்க முடியாது எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் தெரிவித்துள்ளனர்.