நாடு தழுவிய ரீதியில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடும் அதிபர்கள், ஆசிரியர்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில் மட்டக்களப்பில் உள்ள அதிபர்கள், ஆசிரியர்கள் கறுப்புப் பட்டியுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தமிழர் ஆசிரியர் சங்கத்தின் துணைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் அதிபர்கள், ஆசிரியர்கள் இணைந்து கறுப்புப் பட்டியணிந்து இன்று அரை மணித்தியாலம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
ஆசிரியர்கள், அதிபர்கள் இணைந்து நாம் ஒற்றுமையுடன் கறுப்புப் பட்டியணிந்து கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தி விட்டு தொடர்ந்து கறுப்புப் பட்டியுடனேயே கற்பித்தல் கடமைகளைச் தொடர்ந்து செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
குறைந்த வேதனங்களோடு பணியாற்றுகின்ற அதிபர்கள், ஆசிரியர்களின் வேதனங்கள் அதிகரிக்கப்பட்டு சம்பள முரண்பாடுகளை தீர்க்கப்பட வேண்டும், ஆசிரியர்களுக்கான அவசியமற்ற சுமைகள் கொடுப்பதை நீக்குவதோடு மத்திய அரசு கல்விக்காக ஒதுக்கும் நிதி போதுமானதாக இல்லை என நாம் இதற்கு முன் பல போராட்டங்களை முன்னெடுத்திருந்த போதும் எந்தப் பயனும் இதுவரை கிட்டவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.