கொழும்பிலுள்ள ஹோட்டல்களில் சாப்பிடுவோருக்கு எச்சரிக்கை! வெளியான அதிர்ச்சித் தகவல்

Report Print Vethu Vethu in சமூகம்
2236Shares

கொழும்பில் உள்ள உணவகங்கள் தொடர்பில் சுகாதார பரிசோதகர்கள் அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

நேற்றைய தினம் முழுவதும் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் கொழும்பு நகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி ருவண் விஜயமுனியினால் இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய நேற்றைய தினம் கொழும்பு நகரம் முழுவதிலும் உள்ள 120 உணவகங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

நட்சத்திர தர ஹோட்டல்கள் என காணப்பட்ட போதிலும், சமைக்கும் இடங்களில் சுகாதார தன்மை பாதுகாக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

உணவங்களில் உணவு உட்கொள்பவர்கள் மீதம் வைக்கும் இறைச்சி துண்டுகள் பொறிக்கப்பட்டு மீண்டும் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பழைய இறைச்சி, மீன் உள்ளிட்ட பல பொருட்கள் குளிர்சாதன பெட்டிகளில் நீண்ட காலமாக வைத்து பயன்படுத்தப்படுகின்றது.

அத்துடன் ஐஸ்கிறீம் வைக்கும் குளிர்சாதன பெட்டியில் வெட்டிய மீன்கள் வைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. குளிர்சாதனப்பெட்டியை துப்பரவு செய்யப்படுவதே இல்லை என சுகாதார அதிகாரிகளினால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பொரியலுக்கு பயன்படுத்தும் எண்ணையை மாற்றாமல் கறுப்பு நிறமான பின்னரும் அதனையே பயன்படுத்துவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சமைக்கும் இடங்கள் சுத்தமாக வைக்கப்படாமல் சுகாதாரத்திற்கு சீர்கேடுகளை ஏற்படுத்தும் வகையில் பராமரிப்பதாக குறிப்பிடப்படுகின்றது.

வெளித் தோற்றத்தில் ஆடம்பரம் போன்று காட்டிக் கொண்டாலும், உள்ளக ரீதியாக படுமோசமான நிலை காணப்படுவது குறித்து சுகாதார பரிசோதர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.