அரச பயங்கரவாதம் இடம்பெற்றதாக கூறிய மகிந்த! விடுதலைப் புலிகள் மீதும்...

Report Print Steephen Steephen in சமூகம்

மக்கள் விடுதலை முன்னணியின் போராட்டம் நடந்த நேரத்தில் தென் பகுதியில் 60,000 இளைஞர், யுவதிகள், இலங்கை படையினராலும் பொலிஸாராலும் கொலை செய்யப்பட்டதாக மகிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச அதனை அப்போது, அரச பயங்கரவாதம் என அடையாளப்படுத்தினார் எனவும் பின்னாளில் அந்த அரச படையினர் மேற்கொண்ட அதேவிதமான செயலை அரச நிர்வாகம் என அடையாளப்படுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஒரே நாடு என்ற நிலைப்பாட்டில் தாம் இருப்பதால், மேற்படி நிலைப்பாடு தவறான செயல் என தாம் கூறுவதாகவும் அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் போர் குற்றம் இலங்கை படையினர் மீது மட்டும் சுமத்தப்படவில்லை. விடுதலைப் புலிகள் மீதும் சுமத்தப்படுகிறது.

இதனால், இரண்டு தரப்பு குறித்தும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். எது எப்படி இருந்த போதிலும் இலங்கை அரசு சர்வதேசத்திற்கு முன்னால் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் எனவும் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers