வெற்றிலை, பாக்கு, புகையிலை போன்றவற்றினை அரச நிறுவனங்களுக்குள் பயன்படுத்த மற்றும் விற்பனைச் செய்ய தடை விதிக்க கோரி சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பித்துள்ளார்.
குறித்த பத்திரம் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போதே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்காகவே குறித்த பத்திரம் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.