தமிழர்களின் வாக்குகளால் நாடாளுமன்றம் சென்ற கூட்டமைப்பு எம்.பிக்கள் செய்யும் காரியம்

Report Print Sumi in சமூகம்

யாழ். பல்கலை மாணவர்களினால் எதிர்வரும் சனிக்கிழமை மேற்கொள்ளப்படவுள்ள மாபெரும் போராட்டத்திற்கு பூரண ஆதரவை வழங்குவதாக தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் யாழ். அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

ஐ.நா சபையினால் இலங்கைக்கு கால நீடிப்பு வழங்க கூடாதென தெரிவித்து யாழ். பல்கலைக்கழக மாணவர்களினால் எதிர்வரும் சனிக்கிழமை மாபெரும் போராட்டமொன்று நடத்தப்படவுள்ளது. இந்த நிலையில் குறித்த போராட்டத்திற்கு தமிழ் தேசிய பசுமை இயக்கம் பூரண ஆதரவை வழங்கும்.

தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று நாடாளுமன்றம் சென்று அரசாங்கத்தை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வரும் த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதோடு இப்படியான செயற்பாடுகள் மூலம் தமிழர்களுக்கு எந்த தீர்வும் கிடைக்கப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இந்த போராட்டத்தில் அனைவரும் கலந்து கொண்டு தமது ஆதரவை வழங்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.