யானையை கண்டு பயந்த இளைஞருக்கு நேர்ந்துள்ள பரிதாபம்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

கோமரங்கடவல - திரியாய் பிரதான வீதி, கஜுவத்த பகுதியில் காட்டு யானையை கண்டு பயந்து விழுந்த இளைஞரொருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ள நிலையில் படுகாயமடைந்த குறித்த நபர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அடம்பன் பகுதியை சேர்ந்த லஹிறு மதுசங்க (22 வயது) என்பவரே சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

படுகாயமடைந்து மயக்கமுற்ற நிலையில் வீதியில் கிடந்த இளைஞரை அப்பகுதியால் சென்றவர்கள் கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இதன் பின்னர் அவர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Latest Offers