இன்று மீண்டும் மட்டக்களப்பில் பிரபல நகைச்சுவை நடிகர் விவேக்

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு நகருக்கு இன்று விஜயம் மேற்கொண்ட பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளார்.

மட்டக்களப்பு - காந்திபூங்காவில் உள்ள காந்தியடிகளின் சிலைக்கு மாலை அணிவித்து வணக்கம் செலுத்திய அவர் பசுமை புரட்சிக்கு அமைவாக அங்கு மரக்கன்றையும் நாட்டியுள்ளார்.

அதனை தொடர்ந்து நீருற்று பூங்காவில் உள்ள சுவாமி விபுலானந்திரின் திருவுருவச்சிலைக்கும் மாலை அணிவித்து வணக்கம் செலுத்திய நிலையில் மட்டக்களப்பு மாநகரசபைக்கு சென்று மாநகரசபையினை பார்வையிட்டுள்ளார்.

இதன்போது விவேக், மாநகரசபை முதல்வரினால் நடிகர் நினைவு சின்னம் வழங்கியும், பொன்னாடை போர்த்தியும் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

அதனை தொடர்ந்து மாநகரசபையில் ஊழியர்களை சந்தித்த அவர் அங்கு சிறப்புரையாற்றியுள்ளார்.

இதில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், ஆணையாளர் க.சித்திரவேல், மாநகரசபை உறுப்பினர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பில் நேற்று முன்தினம் சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரையின் 125 ஆவது ஆண்டு நிறைவு தினத்தினை குறிக்கும் வகையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர் நேற்றைய தினம் விவேக் திருகோணமலைக்கு விஜயம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers