பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணி : மூடப்பட்ட நாடாளுமன்ற வளாக வீதி

Report Print Gokulan Gokulan in சமூகம்

அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத தடை சட்டத்தை உடனடியாக இரத்து செய்யுமாறு கோரி அனைத்து பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்ட பேரணி இன்று மேற்கொள்ளப்பட்டதுடன், ராஜகிரியவை அண்மித்த வீதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்கள் தற்போது ராஜகிரியவில் இருந்து பத்தரமுல்லை திசை நோக்கி பயணிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பல்கலைக்கழக மாணவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் நுழைய முற்பட்டதையடுத்து, நாடாளுமன்றத்துக்கு பிரவேசிக்கும் வீதி மூடப்பட்டுள்ளது.

மேலும் பாதுகாப்பு கருத்தி அங்கு பொலிஸார் மற்றும் கலகம் அடக்கும் பிரிவினர் ஆகியோர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பேரணியின் 5000இற்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.