இலங்கைக்கு படையெடுக்கும் வெளிநாட்டவர்கள்! இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பறிபோகும் அபாயம்

Report Print Vethu Vethu in சமூகம்
1902Shares

இலங்கையில் பெருந்தொகை வெளிநாட்டவர்கள் பணி செய்து வருவதால் நாட்டிலுள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் போகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

சுமார் 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட இந்தியர்கள் மற்றும் சீனர்கள் பணி செய்து வருகின்றனர். அவர்களுக்கு மேலதிகமாக நூற்றுககணக்கான பங்களாதேஷ் நாட்டவர்களும் பணி செய்து வருகின்றமை தெரிய வந்துள்ளது.

காலை மற்றும் மாலை நேரங்களில் பெருந்தொகை வெளிநாட்டு பணியாளர்களை கொழும்பு காலி முகத்திடல் பகுதியில் காணப்படுகிறது.

இந்தியர்கள் மற்றும் பங்களாதேஷ் நாட்டவர்களின் தோற்றம், இலங்கையர்களுடன் ஒப்பிடும் போது பெரிய அளவில் வித்தியாசம் இல்லை என்பதனால் சீனர்கள் தனியாக தெரிவதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்நிலைமை நீடித்தால் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பற்ற நிலைமை ஏற்பட்டு விடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டவர்கள் பணி செய்வதாக பலர் கூறுகின்ற போதிலும், இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் புள்ளிவிபரங்களுக்கமைய 23 நாடுகளை சேரந்த 26434 பேர் இலங்கையில் பணி செய்வதாக தெரியவந்துள்ளது.

2019ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில் தொழில்சார் விசாவை பெற்றவர்களின் எண்ணிக்கை 26434 என குடிவரவு குடியகல்வு திணைக்கள தரவுகள் தெரிவிக்கின்றன.

அதற்கமைய இந்தியாவை சேர்ந்த 10754 பேரும், சீனாவை சேர்ந்த 10298, பங்களாதேஷை சேர்ந்த 575 பேரும், பிரித்தானியாவை சேர்ந்த 573 பேரும், கொரியாவை சேர்ந்த 498 பேரும் இலங்கையில் தொழில் செய்து வருகின்றனர்.

இதற்கு மேலதிகமாக சட்டவிரோதமாக பல வெளிநாட்டவர்கள் இலங்கையில் தொழில் செய்வதாக குறிப்பிடப்படுகின்றது.

அதற்கமைய சுற்றிவளைப்புகளின் போது பல வெளிநாட்டவர்கள் இதுவரையில் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் காலங்களில் இலங்கையில் மேலும் பல நிர்மாண பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதன் காரணமாக மேலும் பல வெளிநாட்டு பணியாளர்களை இணைத்து கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக பிரதி அமைச்சர் புத்திக்க பத்திரண தெரிவித்துள்ளார்.