பால்மாக்கள் விடயத்தில் இலங்கையின் விலைக்கட்டுப்பாட்டு நிறுவகம், சூத்திரம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளது.
பால்மாக்களின் உற்பத்தி செலவு மற்றும் நாணய பரிமாற்றம் என்பவற்றை கருத்திற்கொண்டு இந்த சூத்திரம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
கட்டுப்பாட்டு விலை காரணமாக சிறிய விநியோகஸ்தர்கள் தமது இறக்குமதிகளை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
பெரிய விநியோகஸ்தர்கள், ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி காரணமாக நட்டத்தை அடைந்தனர். இந்தநிலையிலேயே பால்மாக்களுக்கு விலைச்சூத்திரத்தை அறிமுகப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.