வடக்கு ஆளுநரிடம் கையளிக்கப்பட்டுள்ள மனு!

Report Print Suthanthiran Suthanthiran in சமூகம்
125Shares

வடகிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் 8 போ் கொண்ட குழு இன்று வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவனை சந்தித்து மகஜா் ஒன்றிணை கையளித்துள்ளனா்.

இலங்கை அரசாங்கம் சார்பில் ஜெனீவா செல்லவுள்ள 3 போ் கொண்ட குழுவில் வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவனையும் ஜனாதிபதி இணைத்துள்ளார்.

இந்நிலையில் தாம் ஜெனிவாவில் தமிழ் மக்கள் சார்பில் எதையாவது பேசவேண்டுமானால் அதனை தனக்கு நேரடியாகவோ, எழுத்துமூலமாகவோ சமா்பிக்கும்படி ஆளுநா் பகிரங்கமான அறிவித்தல் ஒன்றிணை வெளியிட்டிருந்தார்.

இதற்கமைய ஆளுநரின் பொதுமக்கள் தினமான இன்றைய தினம் கைதடியில் உள்ள வடமாகாண முதலமைச்சா் அமைச்சில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் 8 போ் உள்ளடங்கிய குழுவினா் வடமாகாண ஆளுநரை சந்தித்து தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜா் ஒன்றிணை கையளித்துள்ளதுடன், ஆளுநருக்கு நேரடியாகவும் தமது கருத்துக்களை கூறியிருக்கின்றார்கள்.

ஆளுநருக்கு கையளிக்கப்பட்ட மகஜரில் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் பெயா் பட்டியலை வெளிப்படுத்தவேண்டும், தடுப்புமுகாம்கள், சிறைச்சாலைகளில் உள்ளவா்களின் விபரங்களை வெளிப்படுத்தவேண்டும்.

காணாமல்போனவா்கள் அலுவலகத்தை நிராகரிக்கிறோம் என்பன உள்ளடங்கலாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனா்.