பிரித்தானியர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்

Report Print Ajith Ajith in சமூகம்
666Shares

பிரித்தானிய பொதுமகன் குரோம் ஷேக் கொலை குற்றவாளிகள், தமக்கு வழங்கப்பட்ட தண்டனையை ஆட்சேபித்து தாக்கல் செய்த மனுவை மீளப்பெற்றுக்கொண்டனர்.

தங்காலை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சம்பத் விதானபத்திரன உட்பட்ட தண்டனை கைதிகளே இந்த மனுவை தாக்கல் செய்திருந்திருந்தனர்.

2011ஆம் ஆண்டு குரோம் ஷேக்கை கொலை செய்து அவரின் ரஸ்ய நண்பியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு இவர்கள் மீது சுமத்தப்பட்டிருந்தது.

இந்த ஆட்சேபனை மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது குற்றவாளிகள் தரப்பு தமது மனுவை மீளப்பெற்றுக்கொள்வதாக அறிவித்தது.

எனினும் நான்காவது குற்றவாளி தமது மனுவை மீளப்பெறவில்லை. இதனையடுத்து அவரின் வழக்கு விசாரணை, ஜூலை 24ஆம் திகதி நடைபெறவுள்ளது.