நீதிபதி இளஞ்செழியனின் முயற்சியினால் அதி நவீன வசதிகளுடன் உருவாகும் புதிய நீதிமன்றம்!

Report Print Abdulsalam Yaseem in சமூகம்
530Shares

கிழக்கு பிராந்திய மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் முயற்சியினால் திருகோணமலையில் அதி நவீன வசதிகளுடன் ஐந்து மாடி நீதிமன்ற கட்டடத்தொகுதிகளை அமைக்க திட்டமிட்டுள்ளது.

இக்கட்டடம் அமைப்பது தொடர்பான விஷேட கலந்துறையாடலொன்று இன்று (13) திருகோணமலை மேல் நீதிமன்ற கட்டடத்தில் இடம் பெற்றுள்ளது.

நீதி அமைச்சின் பொறியலாளர் குழுவினருக்கும் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனுக்குமிடையிலேயே இக்கலந்துரையாடல் இடம் பெற்றுள்ளது.

இக்கலந்துரையாடலையடுத்து திருகோணமலை பழைய நீதிமன்ற கட்டடத்தொகுதியினையும் பார்வையிட்டனர்.

இதனையடுத்து குறித்த பழைய கட்டடத்தை உடைத்து ஐந்து மாடி கட்டடம் ஒன்றை 250 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்க தீர்மானித்துள்ளதாகவும் நீதியமைச்சின் உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த ஐந்து மாடி கட்டடமானது திறந்த நீதிமன்றங்கள், நீதிபதிகளின் சமாதான அறைகள் மற்றும் சட்டத்தரணிகளின் அறிவுறுத்தல் அறைகள் என்பன உள்ளடங்குவதாகவும் தெரியவருகின்றது.

இதேவேளை 250 மில்லியன் ரூபாய் பணத்தையும் வரவு செலவின் போது ஒதிக்கீடு செய்வதற்கும் தீர்மாணிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.