மகளை வைத்தியசாலையில் அனுமதித்த தாய் வைத்தியர் முன்னிலையில் மரணம்

Report Print Vethu Vethu in சமூகம்

கந்தளாயில் மகளின் நோய் தொடர்பான தகவல்களை வைத்தியரிடம் தெரிவித்துக் கொண்டிருந்த தாய் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்று முன்தினம் மாலை மூன்றரை வயது மகளுக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் மகள் அனுமதிக்கப்பட்டார்.

மகளின் நோய் மற்றும் அவர் தொடர்பாக தகவல்களை வழங்கி கொண்டிருந்த போது தாய் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

கந்தளாய் அரயவன்ஷ் மாவத்தையை சேர்ந்த என்ற 41 வயதான பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்ட மகள் குணமடைந்துள்ளார். உயிரிழந்த தாயின் மரணம் தொடர்பில் பிரேத பரிசோதனை நடத்தப்படவுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.