கலாச்சார சீர்க்கேடுகளை தடுக்கும் வகையில் சுற்றுலா பூங்கா அமைக்க நடவடிக்கை

Report Print Ashik in சமூகம்

மன்னார் பிரதான பாலம், நுழைவாயில் பகுதியில் அண்மைக்காலமாக இடம்பெற்று வந்த கலாச்சார சீர்க்கேடுகளை தடுக்கும் வகையிலே மன்னார் நகரசபையினால் அங்கு 'சுற்றுலா பூங்கா' அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்ததாக மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் இன்று (14) ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

குறித்த பகுதியில் கடும் பற்றைகள் காணப்பட்டதோடு, அங்கு சமூகவிரோத மற்றும் கலாச்சார சீர்கேடுகள் இடம்பெற்று வருவதாக சமூக ஆர்வளர்களினால் மன்னார் நகர முதல்வரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில் குறித்த பகுதிக்கு நேரடியாக சென்று பார்த்த போது பல்வேறு சமூகவிரோத செயற்பாடுகள் இடம் பெற்றமைக்கான ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இந்த ஆதாரங்களின் அடிப்படையில் மன்னார் நகரசபையின் பணியாளர்களை வைத்து அங்கு சிரமதானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

தற்போது குறித்த பகுதி சுத்தம் செய்யப்பட்டு அழகுப்படுத்தப்பட்டு, மின்விளக்குகள் பொறுத்தப்பட்டுள்ளன.

எதிர்காலத்தில் அப்பகுதியை கடற்கரை பூங்காவாக அமைக்க மன்னார் நகரசபைக்கு 83 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.